Tuesday, December 13, 2011

JACKPOT!!!

ஜேக்பாட்!!!

முதியவர் ஒருவர், பல ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டிருந்தார். பரிசே விழுந்ததில்லை. "சரி, இது போதும். இதற்குமேல் வாங்கும் வழக்கத்தை நிறுத்திவிடுவோம்", என்று உறுதி செய்துகொண்டு, ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டார்.
வீடு திரும்பும்போது நெஞ்சு வலி. ஹார்ட் அட்டாக்!
மருத்துவமனையில் சீசீயூவில் வைத்து தீவிர வைத்தியம் செய்தார்கள். பிழைத்துகொண்டார்.
அடுத்தநாள் அவருக்கு ஜேக்பாட் விழுந்தது. பரிசுப்பணத்தை வாங்க வேண்டும்.
ஆனால் இதை எப்படிச்சொல்வது? அதிர்ச்சியில் இருதயம் நின்றுவிட்டால்?
ஆகவே உறவினர்கள் அவருடைய டாக்டரிடம் சென்றார்கள். அவரையே விட்டு பக்குவமாகச் சொல்லச்சொன்னார்கள்.


பேஷண்ட்டிடம் டாக்டர் சென்றார்.


"ஹலோ! எப்பிடி இருக்கீங்க மிஸ்டர் சோணாசலம்?"


"ஒங்க புண்ணியத்துலயும் கடவுள் கிருபையாலும் பொழச்சுக்கிட்டேன், டாக்டர்".


கொஞ்சம் பரிசோதனை; குசலங்கள்; மருத்துவ ஆலோசனை.


"அதுசரி. மிஸ்டர் சோணாசலம்? நல்லா பொழச்சுட்டீங்க. இனிமேல ரொம்ப நாளு நீங்க ருப்பீங்க. சந்தோஷமா இருக்கோணும். அதுக்கு ஏத்தாப்புல ஒங்களுக்கு ஜேக்பாட் விழுந்தா என்ன செய்வீங்களாம்?


"டாக்குட்டரய்யா, இப்ப நான் உசிரோட இருக்கேன்னாக்க அது ஒங்கனாலதான், டாக்டர். வாநாள் பூரா லாட்டிரி லாட்டிரின்னுட்டு பணத்தத் தொரத்திக்கிட்டே கழிச்சுப்புட்டேன். யிப்ப உசிரு பொழச்சு வந்ததுக்கப்புறந்தான் வாழ்க்கையில பணத்த விட முக்கியமா இருக்குறது எவ்வுளவோ இருக்குன்னு தெரிந்சுது. கையி காலு சொகத்தோட, கெடச்சத தின்னுக்கிட்டு, மூச்சு விட்டுக்கிட்டு திருப்தியா இருந்தாவே பெரிசு. "வெந்ததத் தின்னு, திண்ணயில தூங்கி, விதி வந்தாச் சாவம்",னுட்டு எங்க அப்பத்தாக் கெழவி சிங்கம்பிடாரியா அடிக்கடி சொல்லுவான்னுட்டு சொல்லுவாஹ. எனக்குத்தான் அதெல்லாம் இது நால வரெய்க்கும் தெரியாம போச்சு. இப்பத்தான் எது உம்மையில நெறவு, எது கொறவு எதுன்னு தெரிஞ்சுச்சு. டாக்குட்டரய்யா அதுபோதும். எனக்கெதுக்கு லாட்டிரியும் கீட்டிரியும். அப்புடி ஜாக்குப்பாட்டு கீக்குபாட்டுன்னு உசிரோட இருக்கும்போதே கடோசி கடோசியா விளுந்துச்சுன்னாக்க, அத அப்பிடியே வாங்கி என்னோட உசிரக்காத்த ஒங்களுக்கே குடுத்துருவேன், டாக்குட்டரய்யா".


டாக்டர் கீழே சரிந்தார்.
டாக்டருக்கு ஹார்ட் அட்டாக்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Wednesday, November 16, 2011

RIVALRY

நானா, நீயா?

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அவ்வளவாகப் பிடித்துக்கொள்ளாது. சில முக்கியமான வரலாற்று, இன அடிப்படை, பொருளாதாரக் காரணங்கள் உண்டு.
மலேசியாவின் நீண்ட காலப் பிரதமர் டாக்டர் மஹாத்தீர் முஹம்மது. சிங்கப்பூருக்கு ஒரு மூத்த மந்திரி இருந்தார். இவர்கள் இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காது.
இதை வைத்து பல கற்பனைக் கதைகள் புனையப்பட்டன. சர்தார்ஜீ ஜோக்ஸ் மாதிரி.


இருவரும் ஒருமுறை ஒரு பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனராம்.
அப்போது லஞ்ச் சாப்பிடும்போது அருகருகே உட்கார்ந்துகொண்டு பேசிக்
கொண்டிருந்தனர்.
நண்டுக் கறி பரிமாறப்பட்டது. பெரிய பெரிய காண்டா நண்டு.
பேச்சு வாக்கில் சிங்கப்பூர் மந்திரி கேட்டார், "நீங்கள் நண்டின் ஓட்டை என்ன
செய்வீர்கள்?"
மஹாத்தீர்:"தூக்கி எறிந்துவிடுவோம்".
சிங்கை மந்திரி: "நாங்கள் தூக்கி எறிய மாட்டோம். அவற்றை ரீஸைக்லிங் செய்து நண்டு க்ரேக்கர் பிஸ்கட் ஆகச் செய்து மலேசியாவுக்கு அனுப்பி விடுவோம்".


அடுத்தாற்போல இதே மாதிரி பேச்சு சென்று கொண்டிருந்தது.
சிங்கை மந்திரி: "நீங்கள் சூயிங் கம்மை மென்றபின்னர் என்ன செய்வீர்கள்?"
மஹாத்தீர்: "நாங்கள் துப்பிவிடுவோம்".
சிங்கை: "நாங்கள் ஓரிடத்தில் பத்திரமாகத் துப்பச் செய்து, அவற்றை யெல்லாம் சேகரித்து, ரீஸைக்கிலிங் செய்து குடும்பக் கட்டுப்பாட்டு ரப்பர் உறைகளாகிய கோண்டோம்களைத் தயாரிப்போம். அவற்றை மலேசியாவுக்கு அனுப்புகிறோம்".
மஹாத்தீர் பேசாமல் இருந்தார்.


சாப்பிட்டு முடித்து சிங்கை மந்திரி எழுந்தபோது, மகாதீர் சொன்னார்:
"ஆஸே இன்ச்சே ***-ஆஹ். வாட் யூ டூ டெஙான் யூஸ்ட் கோண்டோம்-லா?"(பயன்படுத்திய உரைகளை என்ன செய்வீர்கள்?")
சிங்கை: "தூக்கி எறிந்துவிடுவோம்.
மகாதீர்: "கீத்தா-னீ தாக் புவாங்..... ஆப்ப காத்த நாம...... கோண்டோம் கோண்டோம் யாங் தெலாஹ் பாக்காய். கித்தா புவாட்..... ஆப்ப காத்த நாம..... ரீஸைக்லிங் டெஙான் கோண்டோம், டான் ட்ரான்·பார்மஸிக்கான் கெப்பாட சூயிங் கம்.
சூயிங் கம்-னீ கித்தா எக்ஸ்பொர்ட்கான் டூ யுவர் கண்ட்ரி சிஙாப்போ-லா" (நாங்கள் கோண்டோம்களை எறிவதில்லை. அவற்றை ரீஸக்லிங் செய்து
சூயிங் கம் ஆக்குகிறோம். அவற்¨றை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறோம்).


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Thursday, November 10, 2011

From Agathiyar-#2

இந்த இடத்தில் ஒரு சிறிய Break கொடுக்கவேண்டியுள்ளது.
முந்நூறு ஆண்டுகளில் ஐம்பத்தைந்து போர்களைச் செய்த பாண்டியர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டியுள்ளது.
சராசரியாகப் பார்த்தால் 300/55 = 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 13 நாட்களுக்கு ஒரு முறை போர். 
:-)
இது சும்மா ஒரு கணக்குதான். 
பல சமயங்களில் அடுத்தடுத்து சண்டை கொடுத்திருப்பார்கள். சில சமயங்களில் ஒரு தலைமுறை பேசாமல் இருந்திருக்கலாம். 
"எலே மழவராயா...... பசங்க எல்லாங் கொஞ்சம் பெரிசாகட்டும். இப்பப் போய்யி அவனுஹள சண்டேலெ விட்டம்னாக்க, பயத்துலயே சாவானுவ. வேணும்னாக்க பல்லவங்க்ய வுடுற அம்புஹள 
வாங்கிக்யிறதுக்கு வேண்ணா அவனுஹள முன்னால வுடலாம். மத்தவடிக்கி இவனுவ பிரயோசனப் படம்மாட்டாங்க்ய..... என்ன சொல்லுறீரு?"
"ஆமாமுங்க மவராசா...... பதுனெட்டு வயசுன்னாக்கெ நல்ல பருவமுங்க. அதுக்கு நடுவுல 
வெலச்சல்லாம் சேத்து வெச்சுக்கலாம். கத்தி கித்தியெல்லாம் அடிச்சி கிடிச்சி வெச்சுறலாம். போன ரெண்டு தபா, கும்மோணத்துக் கோட்டயப் புடிக்க ஐயவித்துலாமெ அம்பது செஞ்சதுல அங்கிட்டு புறமலெ நாட்டுக் காடுஹள்லாமெ அழிஞ்சு போச்சு. இனிமே மரமெல்லாம் பெரிசாகனும். அம்பு அஞ்சு லெச்சம் வோணும். வில்லுஹ இருவதுனாயிரம் வோணும். அப்பறம் அந்த ஈட்டிஹ முப்பதுனாயிரம் 
வோணும்ல. மரமெல்லாமே வெட்டுப்பட்டுப் போச்சுங்களெ மவராசா. அதுங்கள்லாமெ இனிமெ வளரோணும்ல?"
இந்த மாதிரிதான் ஏதாவது ஒரு பாண்டிய மன்னர் அவருடைய முக்கிய படைத் தலைவரான 
ஏதாவது ஒரு மழவராயரிடம் சொல்லி அவரும் பதில் சொல்லியிருப்பார்.
Possibilities.

Monday, October 31, 2011

THE ART OF MONGANISATION (Agathiyar- 011111



TO:
Tuesday, November 1, 2011 8:36 AM

Message body

  அன்பர்களே,


இப்போது புழக்கத்தில் உள்ள சில மிகச் சாதாரண சொற்கள் பழங்காலத்தில் எந்த
அர்த்தத்தில் புழங்கிக்கொண்டிருந்தன என்பது ரொம்பவும் விசித்திரமாக இருக்கும்.
சில சொற்கள் கொஞ்சம்
கொஞ்சம் உருமாறியிருக்கும். சில சொற்கள் அப்படி அப்படியே இருக்கும்.
ஆனால் அர்த்தம்தான் ரொம்பவும் வேறுமாதிரியாக இருக்கும்.
ஏற்கனவே லகிடு, மொங்கான் என்ற சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
மொங்கான் என்பது ஒரு வகையான பெரிய தவளை. குண்டாக இருக்கும். பெரிய தலை. பெரிய
கண்கள்.
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும். அக்கம்பக்கத்தில் பெரும் பூச்சிகள்
வந்தால்
திடீரென்று வாயைத் திறக்கும். வாய்க்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
நாக்கைத் திடீரென்று
'வ்லுக்'கென்று பூச்சியை நோக்கி நீட்டும். நாக்கில் பூச்சி ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே பூச்சியை
நாக்கால் வாரிச் சுருட்டி, நாக்கையும் பூச்சியையும் சேர்த்து வாய்க்குள்
திணித்துக்கொள்ளும். உடனேயே வாயை மூடிக்கொள்ளும். அதே வேகத்தில் பூச்சியை
அப்படியே விழுங்கிவிடும். 'க்லுபுக்'கென்று பூச்சி தொண்டைக்குள் இறங்கும். அதே
நேரத்தில் மொங்கானின் கண்கள்
பிதுங்கும்.
அவ்வளவுதான்.
மீண்டும் "ஓடும் பூச்சி ஓட, உறுபூச்சி வருமளவும் காத்தி"ருக்கும்.
எதுவுமே நடந்த மாதிரி இருக்காது.
கம்ப ராமாயணத்தில் ராமன் சிவதனுசுக்கு நாணேற்றிய மாதிரி, "எடுத்தது கண்டார்;
இற்றது கேட்டார்"தான்.
வாயைத் திறந்ததும் தெரியாது. பூச்சியைப் பிடித்ததும் தெரியாது. வாய்க்குள்
சுருட்டிப் போட்டுக்
கொண்டதும் தெரியாது. விழுங்கியதும் தெரியாது.
ஏதாவது பொருளையோ பணத்தையோ சொத்தையோ யாருக்கும் தெரியாமல் அபகரிப்பதை
'மொங்கான் போடுதல்' என்று சொல்லும் வழக்கு சிவகங்கை வட்டகையில் புழங்கியது.


அன்புடன்


ஜெயபாரதி

BACKGROUND TO DEEPAVALI

திருவுக்குரிய திருநாள்

        தீபாவளியின் உண்மையான பின்னணியைப் பற்றிய கட்டுரைகளில் இது இரண்டாவது.
முதன்முதலில் 1986-இல் மலேசிய தினமணிப் பத்திரிக்கையிலும் 1991-இல் மயில் இலக்கியப் பத்திரிக்கையிலும் எழுதினேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழர்களிடம் தீபாவளி பற்றி தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இவை மலேசியத் தென்னாட்டு இந்துக்களிடம் ரொம்பவும் அதிகமாகக் காணப் படுகின்றன.
நரகாசுரனை சத்தியபாமா சம்ஹரித்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை காளிகா புராணம் என்னும் உப புராணத்தில் உபகதை-துணைக்கதையாகக் காணப் படுவது.
இந்த இடத்தில் சற்று யோசிக்கவேண்டும்.
தென்னாட்டு இந்துக்களிடையே சைவம், வைஷ்ணவம் ஆகிய இரு சமயங்களினிடையேயும் பல காலமாகத் தீராப்பகை நிலவியே வந்திருக்கிறது.
கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாகத் தீபாவளி இருப்பின், இது முழுக்க முழுக்க ஒரு வைஷ்ணவ விழாவாகவே கருதப்பட்டிருக்கும். சைவர்கள் தீபாவளியை அடியோடு புறக்கணித்திருப்பார்கள்.  ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாட மாட்டாத சைவர்கள் தீபாவளியை மட்டும் எப்படிக் கொண்டாடுவார்கள்?
ஆகவே தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேறு பின்னணிகள் இருக்கின்றன.
நவராத்திரியைத் தவிர்த்து, இந்திய இந்துக்களால் அதிகம் கொண்டாடப் படும் பண்டிகைத் தீபாவளிதான்.
வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையைத் தென்னகத்தில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் பண்டிகை மற்றவர்களால் சிறப்பாகக் கொண்டாடப் படுவதில்லை. கேரளத்தின் ஓணம், மற்ற இடங்களில் கிடையாது.
ஆனால் தீபாவளியை இந்திய இந்துக்கள் அனைவருமே கொண்டாடுகிறார்கள்.
ஆனால் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக் கொள்கிறார்கள்.


மஹாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.


ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒவ்வோர் இடத்தில் லட்சுமி அவதரிப்பாள்.
மன்வந்திரம் என்றால் என்ன?
        நம்முடைய காலண்டர் முறை தனித்தன்மை படைத்தது.
       365.25 நாட்கள் கொண்டது ஒரு வருடம். இப்படிப்பட்ட வருடங்கள் 17,28,000 கொண்டது கிருத யுகம். 12,96,000 கொண்டது திரேதாயுகம் .8,64,000 கொண்டது துவாபர யுகம். 4,32,000 கொண்டது கலியுகம்.


இவை அனைத்தையும் மொத்தமாகச் சதுர்யுகம் என்பார்கள்.
43,20,000 ஆண்டுகள் கொண்டது. மஹாயுகம் என்றும் சொல்வார்கள். சதுர்யுகங்கள் அடுத்தடுத்து வந்துகொண்டேயிருக்கும்.
இந்த மாதிரியான சதுர்யுகங்கள் 72 கொண்டது ஒரு மன்வந்திரம். 311 மில்லியன் 40000 வருடங்கள் கொண்டது.
இந்த மாதிரி 14 மன்வந்தரங்கள் தோன்றி மறையும் காலத்தைக் கல்பம் என்பார்கள். இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதே கால அளவுக்கு ஒருப் பிரளயம் ஏற்படும். அது பிரம்மாவின் இரவு. இவ்வாறு நூறு ஆண்டுகள் கொண்டது பிரம்மாவின் ஆயுள்.


இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்தரம் என்பார்கள். இதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் மஹாலட்சுமி தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் தோன்றினாள்.
இந்த மன்வந்தரத்தில் மஹாலட்சுமி பாற்கடலில் தோன்றினாள்.


தூர்வாசர் என்னும் கோபக்கார முனிவரின் சாபத்தினால் தேந்திரனிடமிருது லட்சுமி நீங்கினாள்.  அதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன. ஆகவே உலகெங்கும் சிறப்புக் குன்றியது. மீண்டும் லட்சுமியைத் தோன்றச்செய்ய தேவர்கள் ஆலோசனை செய்தனர்.
பாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகா நாகத்தைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தார்கள்.
கனத்தால் மலை கடலில் அமுங்கியது.
ஆமை வடிவெடுத்து மஹாவிஷ்ணு மலைக்கு அடியிலிருந்து தம்முடைய முதுகால் அதைத் தாங்கி நிலை நிறுத்தினார்.
பாற்கடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவபெருமான் விழுங்கித் தொண்டையில் அடக்கி, அழகாகத் திருநீலகண்டனாகத் திகழ்ந்தார்.


அதன்பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். அவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள்.
அதன் பிறகு உச்சைஸ்ரவஸ் என்னும் தெய்வீகக்குதிரை, அமிர்தம் போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின. ஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்ட லட்சுமியாகவும் காட்சி தந்து பலவகையான செல்வங்களை உலகுக்கு வழங்கினாள்.


இதை முன்னிட்டு தீபத்தை ஏற்றிவைத்து லட்சுமியின் வருகையைக் கொண்டாடினார்கள்.


தீபாவளிக்கு முன்னால் மூன்றுநாட்களுக்குப் பாதாள லோகத்திலிருந்து பூமிக்கு அரக்கர்களும் தீயசக்திகளும் வருகை புரிவார்கள்.
மஹாபலி என்னும் அசுர குல அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள்.
அப்போது ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான ஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை ஸ்ரீதேவியின் துணையோடு தீபங்களின் உதவியால் இருளை அகற்றி, வாணங்கள், பட்டாசுகள், வெடிகள்  முதலியவற்றைக் கொளுத்தி, அந்த தீயசக்திகளை விரட்டி அடிப்பார்கள்.
அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்றுவிடும்.
மஹாபலியை மீண்டும் பாதாள லோகத்துக்கு அனுப்பியபின்னர் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்கள்.


ஐப்பசி மாதத்துத் தேய்பிறைச் சதுத்தசியன்று சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னர் பிறைச்சந்திரன் தோன்றும். அப்போது பூமியிலுள்ள நீர்நிலைகள் எல்லாவற்றிலும் கங்காதேவி ஆவாஹணம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். அந்த சமயத்தில் சந்திரனைப் பார்ப்பார்கள். இதைச் சந்திர தரிசனம் என்பார்கள். அதைத் தொடர்ந்து நல்லெண்ணெயைத் தேய்த்துக்கொண்டு கங்கை ஆவாஹணம் ஆகியுள்ள நீரில் குளிப்பார்கள். இதனை கங்கா ஸ்நானம் என்பார்கள்.


ஒரிஸ்ஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள், வீட்டிற்கு வெளியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தப்படும் மாட்டுச்சாண எருக்குவியல், சகதி, போன்றவற்றில் ஸ்ரீதேவியாகிய லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள்
நம்பினார்கள். இந்தக் கருத்து வேத காலத்திலேயே இருந்தது. லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்த்தமப் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.


"கர்தமேனப் ப்ரஜாபூரா மயி ஸம்பவ கர்தம:" என்ற ஸ்ரீஸ¥க்த வாசகத்தால் இதனை அறியலாம்.
ஸ்ரீ ஸ¥க்தம் என்பது வேத மந்திர நூல். மிகவும் பழைமையானது.


லட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று, லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா', என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக்கூடிய பெயர்கள் உண்டு. தாமரையும் சகதியில் தோன்றுவதுதானே.


வண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின் ஆதாரமான விஷயங்கள்.
"சோழநாடு சோறுடைத்து", என்று ஔவையார் பாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது கொண்டுவந்து சேர்க்கும் சகதியும்தானே?


ஸ்ரீஸ¥க்தம் என்பது ஸ்ரீதேவிக்குரிய மிகச் சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுவது. பதினைந்து ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும்பணம் சம்பாதிப்பவர்கள் மலேசியாவில்கூட உள்ளனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது.


தீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் அதிகம் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு செல்வாக்கை அடைந்தது.
மூத்ததேவியின் தாக்கத்தைப் போக்கி, ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச் சிந்தித்து, நல்லதைச் செய்து, திருவாகிய ஸ்ரீதேவியை வணங்கி வரவேற்போம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, September 29, 2011

அச்சில் வந்தவை




  • பெருங் கட்டுரைகள்:


  • 1. வருங்கால இயல் இதயம் (51 இதழ்)
  • 2. ஸ்ரீதேவி வழிபாடு மயில் (25 இதழ் – இன்னும் முடிவுறவில்லை)
  • 3. தமிழ்த்தாத்தா -மயில் (10 இதழ்)
  • 4. சீதக்காதி மரைக்காயர் - மயில் (5 இதழ்)
  • 5. ஸ்ட்ரெஸ் - உதயம் (11 இதழ்)
  • 6. ராஜராஜசோழர் -தினமணி (5 இதழ்)
  • 7. வால் நட்சத்திரம் - ( 8 இதழ்)

  • ஆய்வுக் கட்டுரைகள்:
  • குமரிக்கண்டம் - ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்
  • இடுக்கண் வருங்கால் நகுக - மேற்படி
  • Feudatories of North Pandya Country – Seminar in Ancient
  • Tamil History, Madurai University
  • New Light on Marudu Brothers – Seminar in Modern South
  • Indian History,
  • Madurai University
  • Archeology – Discovery of Ariviyur – Seminar on South
  • Indian History,
  • Department of Archeology
  • Government of Tamil Nadu




  • இதர படிவங்கள்:

  • 1. இயேசுநாதர் வழிபாடு-

  • 2 விநாயகர் வழிபாடு - அரும்பு

  • 3. விநாயகர் வழிபாடு - இதயம்

  • 4. விநாயகர் கவசம் - அரும்பு

  • 5. ராஜராஜசோழன் - மயில்

  • 6. மின்னல் போர் முறை - மயில்

  • 7. பொங்கல் - தமிழ்நேசன், உதயம், தினமணி, மயில்

  • 8. தீபாவளி -தமிழ்நேசன்,மயில் 

  • 9. நவராத்திரி - தினமணி, மயில்
  • 10. ·லகலாவல்லி மலை - மயில்
  • 11. தேவி வழிபாடு - மயில்
  • 12. கந்தர் ஷஷ்டி – மயில்
  • 13. சங்கடஹர சதுர்த்தி - மயில், வானம்பாடி
  • 14. திருக்குன்றக்குடி – புக்கிட் மெர்தாஜம் நகரத்தார் கோயில் மலர்
  • 15. Sri Lalitha Sahasranamam – தும்பாட் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக மலர்
  • 16. Role of Hindu Temple in Ancient Tamil Society –
  •     தும்பாட் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக மலர்
  •   Souvenir – 6th International Tamil Conference.
  • 17. ஹிட்லரின் காதல் கதை - மலேசிய நண்பன்
  • 18. உலகிலேயே பெரிய இசைக்குழு – மலேசிய நண்பன்
  • 19. ஒன்று போல ஒன்று - தமிழ் நேசன்
  • 20. அக்கினி நட்சத்திரம் / குதிரை சக்தி - தமிழ் நேசன்
  • 21. தமிழ்நாட்டில் எத்தனை மொழிகள் – மலேசிய நண்பன்
  • 22. சிம்ம சொப்பனம் – மயில்
  • 23. அருவியூர் கண்டுபிடிப்பு – மயில் தீபாவளி மலர்
  • 24. சிந்துவெளி நாகரிகம் – மயில் தீபாவளி மலர்
  • 25. ஆதிசங்கரர் - தினமணி
  • 26. காஞ்சிப் பெரியவர் காட்டிய பாதை - மயில்
  • 27. காஞ்சிப் பெரியவர் நூற்றாண்டு சிறப்பு மலர் -மயில்
  • 28. வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே – மயில்
  • 29. வயதா ஒரு தடை? - தன்னம்பிக்கை
  • 30. இளநீர் - உதயம்
  • 31. வடமுகவையில் வடிவேலன் - நகரத்தார் கோயில் மலர், நெற்குப்பை, தமிழ்நாடு
  • 32. தலைவேட்டை - இதயம்
  • 33. ஜப்பானியப் போர் - இதயம்
  • 34. சமயக் கேள்வி பதில் – மயில் (11 இதழ்கள்)
  • 35. நவகண்டம் - தமிழ்நேசன்
  • 36. ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி - தமிழ்நேசன் –1973
  • 37. நிமிடம் - தமிழ்நேசன் 1986
  • 38. சொந்தமாக அணுகுண்டு - தமிழ்நேசன் 1986
  • 39. சிரிப்பின் சிறப்பு – இதயம் 1995
  • 40. காலச்சக்கரம் - தினமணி (3 இதழ்)
  • 41. மகவோட்டம் - தினமணி
  • 42. சூரியகிரகணம் - தினமணி
  • 43. தேவி மாகாத்மியம் - தினமணி, மயில்
  • 44. மாலைமாற்று – மயில்
  • 45. இனிமையைக் கெடுக்கும் இனிமை - தமிழ் மலர் 1973
  • 46. சக்தி வழிபாடு – ரஜராஜேஸ்வரி கோயில் கும்பாபிஷேக மலர் 1977
  • 47. குயில் போல் கூவும் கோழிக்குஞ்சு - தினமணி
  • 48. சேமியா விளைச்சல் - தினமணி
  • 49. மந்திரம், தந்திரம், யந்திரம் – இந்து சங்க வகுப்பு
  • 50. ·க்தி வழிபாடு - கோத்தாபாரு இந்து சங்கம்
  • 51. நவகண்டம் - Museum Negara
  • 52. செரோக்குதொக்குன் - அரும்பு
  • 53. சக்தி வழிபாடு – புக்கிட் தெங்கா மங்கலநாயகி அம்மன் கோயில் அம்மன் மலர்
  • 54. தியானம் – பாரிட் புந்தார் யோகா சென்டர் மலர்
  • 55. நினைவாற்றல் – மயில்
  • 56. தைப்பூசமும் காவடி சிந்தும் - தினமணி
  • 57 .ஜனவரி மாதத்தில் சூரியன் - உதயம்

  • ஆடியோ நாடா 
  • 1. கந்தர் ஷஷ்டி கவசம் – விளக்கமும் படிக்கும் முறையும் 3 பாகங்கள்

  • நூல்கள்:-
  • 1. தமிழ்த்தாத்தா
  • 2. ஸ்ரீதேவி வழிபாடு
  • 3. வருங்கால இயல் முதல் பாகம்
  • 4. இந்து புராணங்களில் வெளியுலகத் தொடர்பு
  • 5. உயிர்களின் தோற்றம் - அறிவியல்
  • 6. ஸ்ட்ரெஸ்
  • 7. பண்டைய இந்திய வானநூல்
  • 8. சக்தி வழிபாடு
  • 9. அப்பாலுக்கு அப்பால்
  • 10. சிறுகதைக் கொத்து
  • 11. மந்திரம், தந்திரம், யந்திரம்
  • 12. விநாயகர் வழிபாடு
  • 13. கடவுளின் உண்மைத் தோற்றம் - அறுபதாம் ஆண்டு மறு வெளியீடு
  • 14. அப்பரின் பக்தியோகமும் தயாமூலதர்மமும்
  • 15. இந்து சமயம் - நேற்று இன்று நாளை
  • 16. கடாரம்
  • 17. லலிதா சஹஸ்ரநாமம்
  • 18. நவராத்திரி பூஜாவிதானம்
  • 19. இந்து கலாச்சாரக் களஞ்சியம்





  • ஆடியோ வீடியோ வெளியீடுகள் :-
  • வீடியோ:-
  • 1.விநாயகர் வழிபாடு – S. P .   ச ¢ த் த ¢   வ ¢ ந ¡ ய க ர்   ஆ ல ய த் து க் கு   ந ன் ¦ க ¡ ¨ ட ய ¡ க த்   த ய ¡ ர ¢ க் க ப் ப டு க ¢ ற து . 
  •  
  •  
  •  நூ ல் க ள்   : - 
  •  
  •  1 . இ ¨ ண ய த் த ¢ ல்   § ’ ய் ப ¢ 
  •  2 . ந ¡ டி   § ’ ¡ த ¢ ட ம் 
  •  
  •  

Wednesday, September 21, 2011

FROM AGATHIYAR-#1 - PATHS LESS WALKED ALONG



அன்பர்களே,


அமேரிக்காவில் உள்ள பிரபல இதழ் ஒன்றுக்காக வேண்டுகோளின்பேரில் எழுதப்பட்டது.
பிரசுரமாகியதா என்பது தெரியாது.
இதை இன்னும் விரிவாக எழுதவேண்டியுள்ளது.......
பாகங்களாகப் பிரித்து எழுதுகிறேன்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"நவீன அறிவியல் மூலம் மெய்ப்பிக்க இயலாத, மறுக்கவும் இயலாத உண்மைகளைப் பற்றிப் பேசும் சிறப்புப் பகுதி ஒன்றினை வெளியிட உள்ளோம். இந்தப் பின்னணியில் நீங்கள் உங்களுக்கு
விருப்பமான ஏதேனும் ஒரு பொருள் குறித்து நீங்கள் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கேட்டவர் கேட்டிருந்தார்.


அவர் கேட்டிருக்கும் விஷயங்களில் நீண்ட காலப்பரிச்சயம் எனக்கு உண்டு.
தமிழர்களே சென்றிராத சில இடங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். அந்த இடங்கள் இருக்கும் மாநிலங்கள் மலாயாவின் கிழக்குப் பக்கத்தில் தென் சீனக்கடலின்கரையில் இருக்கின்றன. ஆனால் கரையோரத்தில் யார் வேலை தந்தது? எல்லாம் காட்டுக்கு நடுவில் உள்ள இடங்கள்.
தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அத்தகைய இடங்களில் வேலை செய்யும்போது பல அபூர்வ
விஷயங்களைப் பார்க்கவும் நேரடியாக அனுபவிக்கவும் நேர்ந்தது.
அவற்றின் தன்மைகளை விளக்குவதோ அல்லது அவை ஏன் அவ்வாறு நடக்கின்றன/ இயங்குகின்றன என்பதை நிரூபிப்பதோ தற்கால சிந்தனையின் பின்னணியில் இயலாத காரியம்.
இப்போது நாம் கைக்கொள்ளும் Straight Thinking, Logical Thinking சிந்தனாமுறைகளின் அடிப்படையில் அவற்றை விளக்கவேமுடியாது.
அந்த சிந்தனாமுறையின் அடிப்படையில் அவை இல்லை என்றும் ஒதுக்கித்தள்ளிவிடமுடியாது.
ஏனெனில் நாம் அவற்றைப் பார்க்கமுடிகிறது; அனுபவிக்கமுடிகிறது.
Cause and Effect என்பனவற்றுக்கு இடையே நிலையான சாஸ்வதமான தொடர்புகளை நாம்
பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டு வந்துவிட்டோம்.
அந்த மாதிரியான தொடர்பை நம்மால் ஏற்படுத்த முடியவில்லையென்றால் கையை விரித்து
விடுகிறோம்; அல்லது அப்படியே ஒதுக்கித்தள்ளி ஓரங்கட்டிவிடுகிறோம்; அல்லது அப்படியெல்லாம் இல்லை அல்லது அப்படியெல்லாம் இருக்காது அல்லது அப்படியெல்லாம் இருக்கமுடியாது என்று மறுத்துவிடுகிறோம்.
நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஒரு பொருளாதார நிபுணர். அவரைச் சுற்றி நடப்பனவற்றைப் பார்த்துவிட்டு, அவர் தமக்கு ஓராண்டுகாலம் விடுப்பு கொடுத்துக்கொண்டு உலகத்தையே வலம் வந்தார்.
அவருடையது ஒரு தேடல். Sylva Mind Control லிலிருந்து டீயெம் தியானம், ஆப்·ரிக்க மாந்திரீகம் என்று தொட்டுக்கொண்டே அவர் பல நூற்றுக்கணக்கான அபூர்வ விஷயங்களை ஆராய்ந்தார்.
தம்முடைய அனுபவங்கள் அறிந்தவை ஆகியவற்றின் அடிப்படையில், ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதினார். 'Powers of The Mind' என்னும் அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை. அவருடைய புனைப்பெயரான Adam Smith என்னும் பெயரில் எழுதியுள்ளார். 'Wealth of Nations'
எழுதிய அவரல்ல இவர்.


அன்புடன்


ஜெயபாரதி


அன்பர்களே,


தியானத்தைப் பற்றிய அவநம்பிக்கையுடன் ஆய்வுகளைத் தொடங்கியவர், ஹார்வர்டு
பல்கலைக் கழகத்தின் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் ஹெர்பெர்ட் பென்ஸன். Relaxation Response என்ற முதல் நூலைத் தொடர்ந்து அவர் செய்த பல ஆய்வுகளின் மூலம்
திபேத்திய யோகியரின் அமானுஷ்யமான சித்திகளைப் பற்றி வியப்போடு அவர் அறிந்துகொண்டவை அவரை Beyond Relaxation Response என்னும் கடைசி நூலை வெளியிடுவதில் கொண்டுவந்துவிட்டது.
ஆ·ப்ரிக்க மாந்திரீகர்கள், கரீபியன் தீவுகளின் மாந்திரீகர்கள் ஒரு மந்திரக்கோலை அல்லது எலும்பை ஒருவனை நோக்கி நீட்டி இறந்துபோகுமாறு சபித்தால் அந்த மனிதன் இறந்துபோய்விடுவதை ஆராய்ந்தார். அந்த மாதிரி இறத்தலை VooDoo Death என்று சொல்வார்கள்.
எப்படி அந்த சபித்தலால் ஏற்படுத்தப்பட்ட அதிர்ச்சி, வேகஸ் நரம்பின் மூலமாக இதயத்தை
நிறுத்திவிடுகிறது என்பதை ஓரளவுக்கு நிறுவினார். அதனையும் அதைப் போன்ற வேறு சில
விஷயங்களையும் அவர் 'Mind Body Effect' என்ற நூலாக வடித்திருக்கிறார்.


தமிழ் மருத்துவ நூல்கள் பாடல்களின் வடிவில் விளங்கும்.
மருத்துவத்தில் மூலிகை மருத்துவம் என்பது ஓர் உட்பிரிவு.
சில மூலிகைகளைப் பிடுங்குவதற்குச் சில வழிமுறைகளை அனுஷ்டிக்கவேண்டியிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட திதியன்று, குறித்த நேரத்தில் இன்னின்ன மாதிரியான இடத்தில் வளரும்
குறிப்பிட்ட மூலிகையின் குறிப்பிட்ட திக்கை நோக்கி ஓடும் வேருக்குப் பூஜை போட்டு, காப்புக்கட்டி, சாப விமோசனம் செய்து, கற்பூர தீபம் காட்டிய பின்னர் அதனை எடுக்குமாறு அந்தப் பாடல்
சொல்லும்.
இந்த மாதிரியான சமாச்சாரம் நம்மிடையே மட்டும்தான் இருக்கின்றன என்று எண்ணி
விடவேண்டாம்.
நைஜீரியாவின் மருத்துவ மாந்திரீகர்களிடமும்-Shamans- இதே மாதிரியான வழக்கம்
இருக்கிறது.
ஸ்விட்ஸர்லந்தின் ஆய்வாளர்கள் சிலர் இதைப் பற்றி ஆராய்ந்தனர்.
குறிப்பிட்ட திதியில் நேரத்தில் பிடுங்கப்படும் வேரில் மற்ற சமயங்களில் அந்த வேரில்
காணப்படாத ரசாயனங்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.
இந்த விஷயம் எப்படி நைஜீரிய மாந்திரீகர்களுக்குத் தெரிந்திருக்கிறது? நம்முடைய மருத்துவப் பாடலும் சொல்கிறது. இந்த அறிவும் ஞானமும் எங்கிருந்து வந்தன; எப்படிப் பரவின? நைஜீரியன்
மாந்திரீகருக்கும் நம்முடைய சித்தருக்கும் என்ன சம்பந்தம்?


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கோத்தாபாரு என்னும் ஊரில் இருக்கும்போது தய்ச்சீ Tai Chi நிபுணர் ஒருவர் அங்கு வந்திருந்தார். தய்ச்சீயைப் பற்றி சில சாதனைகளை அவர்
காட்டினார்.
ஒருவர் பின்னால் ஒருவராக ஏழு பேர் நின்றுகொண்டனர். தமக்கு முன்னால் நிற்பவரின்
முதுகின்மீது இரண்டு உள்ளங்கைகளையும் வைத்துக்கொண்டு நின்றனர். அந்த எழுவரில் முதலாவது ஆள் தய்ச்சீ மாஸ்டரின் உள்ளங்கைகளின்மீது தம்முடைய கையைகளை வைத்து அழுத்திக்
கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையின்பேரில் வரிசையின் உள்ளவர்கள் தமக்கு முன்னால் உள்ள ஆளின் முது¨கின்மீது கைகளை அழுத்தித் தள்ளினார்கள். முதல் ஆள் தாய்ச்சீ மாஸ்டரின் உள்ளங்கையை அழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார். சில வினாடிகள்தாம். தய்ச்சீ மாஸ்டர் ஒரு
சிலிர்ப்பு சிலிர்த்தார். அவ்வளவுதான் அந்த எழுவரும் உதறித் தள்ளியதுபோல் எகிறி விழுந்தார்கள்.
அதனை அடுத்து, மீண்டும் அதே மாதிரி நின்றுகொண்டு அழுத்தினர்.
அப்போதும் தய்ச்சீ மாஸ்டர் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தார்.
இம்முறை எழுவரும் விழவில்லை.
அந்த க்யூ வரிசையின் கடைசி ஆள் இருந்தானே, அவன்மட்டும் சில அடிகள் தள்ளிப்போய்
பிடித்துத் தள்ளினாற்போல விழுந்தான்.
என் நண்பர் ஓமார் டானிடம் கேட்டேன். அவர் தய்ச்சீ, தாவொ சித்தாந்தம் முதலியவற்றில்
நிபுணர். அவர் சொன்னார், "Its all Chi Energy-lah Boss. You people call it Kundalini", என்றான்.
குண்டலினிக்கு அப்படியும் ஒரு உபயோகம் இருக்கிறது என்பதை அப்போதுதான் முதல் தடவையாகத் தெரிந்துகொண்டேன்.


அன்புடன்


ஜெயபாரதி


அன்பர்களே,


தமிழகத்தின் பிரான்மலைக்கு அருகில் பாறைகளை வெட்டிக் கல்லெடுப்பார்கள்.
அப்போதெல்லாம் சில குறிப்பிட்ட மாதங்களில் பாறையை வெட்டமாட்டார்கள். வெட்டுவது
மிகவும் கடினம் என்பார்கள். வேறு சில மாதங்களில் பாறையை வெட்டுவார்கள். அப்போதுதான்
சுலபமாக வெட்டமுடியுமாம். மலை 'தூங்குகிறது' என்பார்கள். மலை தூங்குமா? அல்லது ஏதோ Geodesic Force, GeoMagnetic Field Fluctuations போன்றவற்றால் ஏற்பட்ட விளைவா?


இதுபோன்ற நூற்றுக்கணக்கான விஷயங்கள் என்னை இந்த துறையிலும் உற்று நோக்க வைத்தன.
அதன் விளைவாக ஏற்பட்டதுதான் 'அப்பாலுக்கப்பால்' என்னும் தலைப்பில் நான் எழுத ஆரம்பித்த நூல். அதுவும் ஒரு தேடல்தான்.


ஏற்கனவே நான் இந்த மாதிரியான தேடல்களைப் பள்ளியில் படிக்கும்போதே - பதினைந்து
வயதிலிருந்து செய்ய ஆரம்பித்தவன்.
அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கிப் படிக்கலானேன்.
வரலாறு, இந்திய/தென்னிந்திய வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நான் எடுத்துக்
கொண்ட முக்கிய நடவடிக்கைகளைச் சொல்கிறேன்.
பினாங்கு மாநகரத்தில் என்னுடைய பள்ளிப்படிப்பு. அங்கெல்லாம் காலையில் 7-40 இலிருந்து மதியம் 2-00 வரைக்கும் பள்ளி நேரம்.
மீதி நேரத்தில் இரவு 10-00 மணி வரைக்கும் ஹோம் வர்க், ரிவிஷன் போன்றவற்றுடன் மற்றவகையான படிப்புகளைச் செய்யலாம்.
வீட்டில் கட்டுப்பாடு ரொம்பவும் இருந்ததால் வெளியில் அதிகம் செல்லமுடியாது. மாலையில் அருகில் இருக்கும் எஸ்ப்லனேட் பீச்சுக்குப் போகலாம்.
எங்கள் தெருவிலிருந்த பினாங்கு ஸ்டோர் போன்ற வெளிநாட்டு ஆங்கிலப் புத்தகக் கடைகளுக்கும் பக்கத்துத் தெருவில் இருந்த சிவகுரு என்னும் தமிழ்ப் புத்தகக்கடைக்கும்
செல்லலாம்.
சிவகுருவில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, கலைக்கதிர், கல்கண்டு ஆகியவற்றிற்குச் சந்தா கட்டியிருந்தோம்.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் அங்குச் சென்று 'மன்றம்', 'தென்றல்' போன்ற மற்ற
பத்திரிக்கைகளை நின்றுகொண்டே படிக்கலாம்.
பினாங்கு ஸ்டோரில் பீனோ, டேண்டி, ரேடியோ ·பன், ·பில்ம் ·பன், ஈகில், மற்றும் கிட்
கார்ஸன், பக் ஜோன்ஸ் காமிக்ஸ¤ம் வாடிக்கையாக வாங்கியதால் அங்கும் நின்றுகொண்டே மற்ற புத்தகங்களைப் படிக்கலாம்.
யூஎஸ்ஐஎஸ் லைரரியிலிருந்து ஏராளமான நேச்சரல் ஹிஸ்டரி புத்தகங்கள் வாங்குவது.
பினாங்கு லைப்ரரியில் அமர்ந்துகொண்டு பஞ்ச்ச்(Punch) படிப்பேன்.
Basham எழுதிய Wonder That Was India, நீலகண்ட சாஸ்திரியின் History Of South India
ஆகிய இரு புத்தகங்களையும் திரும்பத் திரும்ப ரீநியூ பண்ணி எடுத்து எடுத்து அவற்றை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தேன்.
பதினேழு வயதிற்குள் ஆங்கில க்லாஸிக்ஸ் பலவற்றைப் படித்தாயிற்று.
பதினேழு பதினெட்டு வயதுகளில் P.G.Wodehouse நாவல்கள் அனைத்தையும் படித்தாயிற்று.
பாஷாம் புத்தகத்தின் சில பாராகிரா·ப்களும் சாஸ்திரியாரின் புத்தகத்தின் முக்கிய பகுதிகளும்
மனப்பாடம்.
பின்னால் அல்டஸ் ஹக்ஸ்லி போன்றவர்களுடைய புத்தகங்களை சீப் ஸேலில் வாங்கி
வைத்திருந்தேன்.
பினாங்கில் கலைதாசன், கலைமணி என்னும் நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்கள் என்னைவிட மூத்தவர்கள். ஆயினும் என்னை ஓர் இண்ட்டலெக்ச்சுவல் கம்ப்பேனியனாக அவர்கள்
நடத்தினார்கள்.
அவர்களிடம் நூற்றுக்கணக்கில் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன.
எல்லாம் இலக்கியம், வரலாறு முதலியவை.
அங்குதான் பழந்தமிழ் வரலாறு - குறிப்பாக 'குமரிக் கண்டம்' எனக்கு அறிமுகமாகியது.
ந.சி.கந்தையா பிள்ளையின் நூல்களை மீண்டும் மீண்டும் படித்தேன்.
இவ்வளவையும் படிப்பதற்கு என்னுடைய தந்தையார் ஏதும் தடை விதிக்கவேயில்லை.
ஏனெனில் தடவைக்குத் தடவை வகுப்பின் முதல் மூன்று பையனாகவே வந்தது.
பதினோரு ஆண்டுகள் படிப்பை எட்டேகால் ஆண்டுகளில் July 1950 - Dec 1858 டபுல்
ப்ரோமோஷன்களால் முடித்தது. சுமாரான பள்ளியில் ஆரம்பித்து, சில மாதங்களிலேயே வெகு விரைவில் பினாங்கிலேயே ஹைக்லாஸ் பள்ளிக்குச் சென்றது.
அந்த வயதிலேயே பலராலும் ஜீனியஸ் Genius என்று புகழப்பட்டது.
சொல்வதற்கு ஒன்றுமில்லைவா.


அன்புடன்


ஜெயபாரதி