Wednesday, November 16, 2011

RIVALRY

நானா, நீயா?

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அவ்வளவாகப் பிடித்துக்கொள்ளாது. சில முக்கியமான வரலாற்று, இன அடிப்படை, பொருளாதாரக் காரணங்கள் உண்டு.
மலேசியாவின் நீண்ட காலப் பிரதமர் டாக்டர் மஹாத்தீர் முஹம்மது. சிங்கப்பூருக்கு ஒரு மூத்த மந்திரி இருந்தார். இவர்கள் இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காது.
இதை வைத்து பல கற்பனைக் கதைகள் புனையப்பட்டன. சர்தார்ஜீ ஜோக்ஸ் மாதிரி.


இருவரும் ஒருமுறை ஒரு பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனராம்.
அப்போது லஞ்ச் சாப்பிடும்போது அருகருகே உட்கார்ந்துகொண்டு பேசிக்
கொண்டிருந்தனர்.
நண்டுக் கறி பரிமாறப்பட்டது. பெரிய பெரிய காண்டா நண்டு.
பேச்சு வாக்கில் சிங்கப்பூர் மந்திரி கேட்டார், "நீங்கள் நண்டின் ஓட்டை என்ன
செய்வீர்கள்?"
மஹாத்தீர்:"தூக்கி எறிந்துவிடுவோம்".
சிங்கை மந்திரி: "நாங்கள் தூக்கி எறிய மாட்டோம். அவற்றை ரீஸைக்லிங் செய்து நண்டு க்ரேக்கர் பிஸ்கட் ஆகச் செய்து மலேசியாவுக்கு அனுப்பி விடுவோம்".


அடுத்தாற்போல இதே மாதிரி பேச்சு சென்று கொண்டிருந்தது.
சிங்கை மந்திரி: "நீங்கள் சூயிங் கம்மை மென்றபின்னர் என்ன செய்வீர்கள்?"
மஹாத்தீர்: "நாங்கள் துப்பிவிடுவோம்".
சிங்கை: "நாங்கள் ஓரிடத்தில் பத்திரமாகத் துப்பச் செய்து, அவற்றை யெல்லாம் சேகரித்து, ரீஸைக்கிலிங் செய்து குடும்பக் கட்டுப்பாட்டு ரப்பர் உறைகளாகிய கோண்டோம்களைத் தயாரிப்போம். அவற்றை மலேசியாவுக்கு அனுப்புகிறோம்".
மஹாத்தீர் பேசாமல் இருந்தார்.


சாப்பிட்டு முடித்து சிங்கை மந்திரி எழுந்தபோது, மகாதீர் சொன்னார்:
"ஆஸே இன்ச்சே ***-ஆஹ். வாட் யூ டூ டெஙான் யூஸ்ட் கோண்டோம்-லா?"(பயன்படுத்திய உரைகளை என்ன செய்வீர்கள்?")
சிங்கை: "தூக்கி எறிந்துவிடுவோம்.
மகாதீர்: "கீத்தா-னீ தாக் புவாங்..... ஆப்ப காத்த நாம...... கோண்டோம் கோண்டோம் யாங் தெலாஹ் பாக்காய். கித்தா புவாட்..... ஆப்ப காத்த நாம..... ரீஸைக்லிங் டெஙான் கோண்டோம், டான் ட்ரான்·பார்மஸிக்கான் கெப்பாட சூயிங் கம்.
சூயிங் கம்-னீ கித்தா எக்ஸ்பொர்ட்கான் டூ யுவர் கண்ட்ரி சிஙாப்போ-லா" (நாங்கள் கோண்டோம்களை எறிவதில்லை. அவற்றை ரீஸக்லிங் செய்து
சூயிங் கம் ஆக்குகிறோம். அவற்¨றை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறோம்).


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Thursday, November 10, 2011

From Agathiyar-#2

இந்த இடத்தில் ஒரு சிறிய Break கொடுக்கவேண்டியுள்ளது.
முந்நூறு ஆண்டுகளில் ஐம்பத்தைந்து போர்களைச் செய்த பாண்டியர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டியுள்ளது.
சராசரியாகப் பார்த்தால் 300/55 = 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 13 நாட்களுக்கு ஒரு முறை போர். 
:-)
இது சும்மா ஒரு கணக்குதான். 
பல சமயங்களில் அடுத்தடுத்து சண்டை கொடுத்திருப்பார்கள். சில சமயங்களில் ஒரு தலைமுறை பேசாமல் இருந்திருக்கலாம். 
"எலே மழவராயா...... பசங்க எல்லாங் கொஞ்சம் பெரிசாகட்டும். இப்பப் போய்யி அவனுஹள சண்டேலெ விட்டம்னாக்க, பயத்துலயே சாவானுவ. வேணும்னாக்க பல்லவங்க்ய வுடுற அம்புஹள 
வாங்கிக்யிறதுக்கு வேண்ணா அவனுஹள முன்னால வுடலாம். மத்தவடிக்கி இவனுவ பிரயோசனப் படம்மாட்டாங்க்ய..... என்ன சொல்லுறீரு?"
"ஆமாமுங்க மவராசா...... பதுனெட்டு வயசுன்னாக்கெ நல்ல பருவமுங்க. அதுக்கு நடுவுல 
வெலச்சல்லாம் சேத்து வெச்சுக்கலாம். கத்தி கித்தியெல்லாம் அடிச்சி கிடிச்சி வெச்சுறலாம். போன ரெண்டு தபா, கும்மோணத்துக் கோட்டயப் புடிக்க ஐயவித்துலாமெ அம்பது செஞ்சதுல அங்கிட்டு புறமலெ நாட்டுக் காடுஹள்லாமெ அழிஞ்சு போச்சு. இனிமே மரமெல்லாம் பெரிசாகனும். அம்பு அஞ்சு லெச்சம் வோணும். வில்லுஹ இருவதுனாயிரம் வோணும். அப்பறம் அந்த ஈட்டிஹ முப்பதுனாயிரம் 
வோணும்ல. மரமெல்லாமே வெட்டுப்பட்டுப் போச்சுங்களெ மவராசா. அதுங்கள்லாமெ இனிமெ வளரோணும்ல?"
இந்த மாதிரிதான் ஏதாவது ஒரு பாண்டிய மன்னர் அவருடைய முக்கிய படைத் தலைவரான 
ஏதாவது ஒரு மழவராயரிடம் சொல்லி அவரும் பதில் சொல்லியிருப்பார்.
Possibilities.