Saturday, April 7, 2012

THE MAMBO JUMBO PRINCIPLE-#1

அகத்தியர் மடற்குழுவில் எழுதியது -
08-04-12

அன்பர்களே,



ஒருவருக்கு மிகக் கஷ்டம். அவர் எனக்கு அவராகவே வந்து உதவி செய்தார். அந்த உதவியில் ஓர் உள்நோக்கம்- மறையுறைத் திட்டம் இருந்திருக்கிறது. 
இருப்பினும் நான் சரநூலின் மூலம் அவருடைய பிரச்னையை அறிந்துகொண்டுவிட்டேன். 
நமக்கு உதவுபவர்களுக்கு நாமும் உதவவேண்டும் இல்லையா?
அவருடைய பிரச்னைக்கு நிவாரணம் தரும் பொருளைத் தந்து, அவருடைய பூஜை அறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வழிகளையும் சொல்லி, தக்க நேரத்தில் அவருக்குரிய உபாசனையையும் 
சொல்லி மந்திரங்களையும் தந்தேன். 
ஆனால் அவரோ திருப்தியில்லாமல் குபேரலக்ஷ்மி மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்குமாறு 
வற்புறுத்தினார்.
"நான் அதையெல்லாம் சொல்லிக்கொடுப்பதில்லை. பாருங்கள்... நானே சிரமப்பட்டுக்கொண்டு..., 
ஒரே ஒரு புத்தகத்தைக்கூட வெளியிட முடியாமல் இருக்கிறேன். உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வசதியும் இல்லை. பென்ஷனிலிருந்துதான் இண்ட்டர்நெட் பில் முதற்கொண்டு கட்டி வருகிறேன். இந்த நிலையில் நான் எப்படி இன்னொருவருக்குக் குபேரலக்ஷ்மி மந்திரத்தைச் சொல்லிக்கொடுப்பது? 
யாராவது நிறைய சம்பாதித்துக்கொண்டிருக்கும் குருக்கள் அல்லது குருமாராகப் பார்த்து அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
"இப்போது உங்களுக்கு உள்ள அரிய தேவை - முக்கியமாகப் பாதுகாப்பு சாதனத்தைக் 
கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு உரிய அதிதேவனை வழிபடும் முறையையும் மூலமந்திரத்தையும் 
கொடுத்திருக்கிறேன். இந்த உபாசனையை ஒழுங்காகச் செய்யுங்கள்".
ஒரு நாள் கழித்து......
"ஐயா, நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன். ஆ·பீஸில் ஒரு சாமி மேடை இருக்கு. அங்கு 
திருப்பதி வெங்கடாசலபதி இருக்கார். அவரை என்ன செய்ய?"
"அவர் பாட்டுக்கு அங்கு இருக்கட்டும்", என்றேன்.
"ஐயா, ஏதாவது கணபதி ஹோமம், அது இது என்று ஏதாவது செய்யவேண்டுமே?", என்றார்.
"அதைக் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதை ஒழுங்காகக் கிரமமாகச் 
செய்து கொடுப்பார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் பாட்டுக்குச் சொல்லிவிட்டு, குருக்கள் அதைச் சரியாகச் செய்யாமல் இருந்தால் என்ன செய்வது? எனக்குத் தெரியாது", என்றேன்.
"உங்களுக்குத் தெரிந்த குருக்கள் யாராவது இருக்கிறார்களா?"
"சிலருடைய பெயர்கள் தெரியும். ஆனால் அவர்களெல்லாம் ரொம்பவும் பிரபலமானவர்கள். இதெல்லாம் செய்துகொடுப்பார்களா என்பது தெரியாது". 
அதன்பிறகு கேட்டேன்.....
"காலையிலும் மாலையிலும் நிறையச் சாம்பிராணி போட்டு, நான் சொல்லிக்கொடுத்த மந்திரங்கள், தோத்திரங்களைச் சொல்லலாமே!", என்றேன்.
"அது போதுமா?" என்ற மாதிரி ஏதோ கேட்டார். 
"உங்கள்மீது நீங்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள்", என்றேன். 
"சரி", என்று அவசர அவசரமாகச் சொன்னார்.


அதான்.... 
இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சங்கள் என்னென்ன உள்ளன?
உபாசனை மிக எளிதானதாக இருக்கிறது. மூலமந்திரமோ சிறியதாக இருக்கிறது. ஜபர்தஸ்து, ஆடம்பரம், படாடோபம், பந்தா முதலிய எவையும் கிடையாது. 
ஆகவே சந்தேகம் வந்துவிட்டது.


இப்படிச் சொல்லியிருக்கவேண்டும்.
"கரபுர கரபுர டுர்ராய ஹ¥ம்பட்
கரபுர கரபுர கிக்கர் பிக்கராய ஸ்வாஹா" 
என்று ஆயிரம் தடவை சொல்லி பதினைந்து கோலோ நெய்யை ஹோமகுண்டத்தில் ஊற்றி, நூறு வடை, ஐம்பது அதிரசம், தேன், ஜரிகை போட்ட பட்டு வேட்டி-துண்டு முதலியவற்றைக் கொட்டச் சொல்லி 
யிருக்கவேண்டும். 
ஹோம முடிவில் அக்கினிச் சட்டியைத் தூக்கிக்கொண்டு ஹோமகுண்டத்தை மூன்று முறை ஆடிக்கொண்டே சுற்றிவரவேண்டும் என்று அடிஷனல் போனஸாகச் சொல்லியிருக்கவேண்டும்.
இதற்கு Jumbo Mambo Principle என்று ஒன்று கண்டுபிடித்துவைத்திருக்கிறேன். 
அதைப் பிறகு சொல்கிறேன்.


அன்புடன்


ஜெயபாரதி

No comments:

Post a Comment