Sunday, July 22, 2012

Chandrashtamam



சந்திராஷ்டமம்


"'சந்திராஷ்டமம்' என்று காலண்டரில் போட்டிருக்கிறதே? அது என்ன?" 
என்று புதிய அன்பர் ஒருவர் கேட்டார்.
இதற்கே ஏற்கனவே பதிலை எழுதியிருக்கிறேன். 
2001-ஆம் ஆண்டில்கூட எழுதிய பதில் ஒன்று டிரா·ப்ட் ·போல்டரில்  இருந்து, கிடைத்தது.
அதையே கொஞ்சம் எடிட் செய்து அனுப்பியுள்ளேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>
சூரிய சந்திரர் விண்ணில் சஞ்சரிக்கும் பாதையை 12 ராசிகளாகவும்  27 நட்சத்திரங்களாகவும் பகுத்திருக்கிறார்கள். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் இருக்கும். ஏற்கனவே இதை விளக்கியுள்ளேன். 
நீங்கள் பிறக்கும்போது எந்த இடத்தில் சந்திரன் இருக்கிறதோ, அதுதான் உங்களின் ஜன்ம ராசி. 
'கோசாரம்' எனப்படும் 'அன்றாட கிரக நகர்வின்' ஆதாரமான நங்கூரப் புள்ளி (anchoring point) என்பது இந்த ஜன்மராசிதான். இந்தக் கணக்கில் இதையே ஒன்றாம் இடமாகக்கொள்வர்கள். எட்டாவது இடத்தை 'அஷ்டம ஸ்தானம்' அல்லது 'அஷ்டமம்' என்று அழைப்பார்கள். 
எந்த கிரகத்துக்குமே எட்டாமிடம் அவ்வளவு சரியான இடமில்லை என்பது ஒரு பொதுவிதி.
முப்பது நாட்களுக்கு ஒருமுறை சந்திரன், தன்னுடைய விண் சஞ்சாரப்  பாதையில் ஒரு வட்டம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டரை நாட்கள் இருக்கும். 
அவ்வாறு நகர்வின்போது எட்டாமிடத்திற்கு வந்து இருப்பதை 'சந்திர - அஷ்டமம்' - சந்திராஷ்டமம் என்று சொல்வார்கள். எட்டாம் இடத்தில் இரண்டரை நாட்கள்  சந்திரன் இருக்கும்போது இருக்கும்போது பதவிசாக
இருக்கப் பார்ப்பார்கள்.
சந்திரனோ கோள்களில் இரண்டாவது பெரிசு. மிக வேகமாகவும் நகர்கிறது. போகிற போகில் என்னத்தையாவது விபரீதமாக எதிர்பாராத வகையில் ஏற்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம். 

No comments:

Post a Comment