Friday, May 17, 2013

MUHAIYADDIN AANDAVAR



முஹையத்தீன் ஆண்டவர் 

(சில குறிப்புகள்)


இஸ்லாமிய சமயத்தில் ஸூஃபி மார்க்கத்தில் சில பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகளை 'தரீக்கத்' என்பார்கள்.

முஹையத்தீன் ஆண்டவர் தற்காலத்து ஈராக் நாட்டின் ஜிலான் என்னும் இடத்தில் கிபி 1077-இல் தோன்றியவர்.

இவர் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் இலக்கியத்தில்
நிறைய இடம் பிடித்திருப்பவர்.

இவரைத்தான் முஹைதீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அழைப்பார்கள்.

அவருடைய தர்கா பழனியில் இருக்கிறது. பழனியாண்டவர்
கோயிலுக்குள்.

அவருடைய முழுப்பெயர்  ஷேய்க் முஹ்யிதீன் அப்துல் காதிர்
அல் ஜிலானி அல் ஹஸானி அல் ஹ¤ஸேய்னி என்பது. முஹம்மது நபிகள்(சல்) அவர்களின் நேரடி வாரிசு என்பதால் அல் ஹஸானி அல்
ஹ¤ஸேய்னி என்ற பெயர்கள்.

பதினெட்டு வயதாகும்போது அக்காலத்து உலகின் மிகச் சிறந்த
மாநகரங்களுள் ஒன்றான பாக்தாத் நகருக்குச் சென்று அங்கிருந்த
உலகின் சிறந்த ஆசிரியர்கள் சிலரிடம் பயின்றார். இஸ்லாமின் பல
சித்தாந்த்தங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் ஓர் ஆசிரியரிடமும்
இஸ்லாமிய ஞானமார்க்கத்தை இன்னொரு ஆசிரியரிடம் கற்றார்.

அதன் பிறகு ஈராக்கின் பாலைவனப் பகுதிகளில் இருபத்தைந்தாண்டு
அலைந்து திரிந்தார். ஐம்பது வயதுக்குமேல் பாக்தாத் நகரத்துக்குத்
திரும்பினார். அங்கு அவர் மக்களுக்கு உபதேசித்தார். அவருடைய
ஆசிரியரின் மத்ராஸா கல்லூரியிலேயே அவருடைய போதனைகள் நடந்தன.

அப்போது உலக மையங்களில் பாக்தாத் நகரம் முதன்மையாக
இருந்தது. கிழக்கு நாடுகளும் மேற்கு நாடுகளும் வடதிசை தென் திசை
நாடுகளும் கூடும் முக்கிய கேந்திரமாக விளங்கியது.

அப்போதைய அரபு உலகின் தலைநகரமாகவும் இருந்தது.
இஸ்லாமின் தலைமைத்துவமும் பேரரசர் அந்தஸ்தும் பெற்ற கலீ·பா
இருக்கும் இடம்.

தமிழ்நாட்டுக்கும் ஈராக்குக்கும் மிக நெருங்கிய தொடர்புகள்
எப்போதுமே இருந்துவந்தன.
ஈராக்கின் பழைய தமிழ்ப் பெயர் 'வச்சிரநாடு'. பாக்தாத் நகரை
தமிழர்கள் 'வகுதாபுரி' என்றழைத்தனர். அதனுடைய சாயலாக தமிழகத்துக்கு
வரப்போக இருந்து, அங்கேயே குடியேறிய அராபியத் தமிழர்கள்
கீழைக்கரையை 'வகுதாபுரி' என்றும் அது இருந்த பிரதேசத்தை
'வச்சிர நாடு' என்றும் அழைத்தனர். பாண்டியர்களின் கல்வெட்டுக்களில்
அது 'பௌத்திரமாணிக்க பட்டினம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டிலேயே கீழைக்கரையில் மசூதி கட்டி
யிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நெருக்கமான
தொடர்பு இருந்தது.
ஆயுளின் கடைசிவரைக்கும் அவர் தம்முடைய போதனைகளைச்
செய்துவந்தார். சில அரிய நூல்களும் எழுதியிருக்கிறார்.
ஸ¥·பி மார்க்கத்திற்கும் நடைமுறை இஸ்லாம் மார்க்கத்துக்கும்
ஒருங்கே பேராசியராக இருப்பவர் ஷேய்க் அப்துல் காதிர் ஜிலானி.
அவர் எழுதிய நூல்களில் பிரபலமாக விளங்குவது '·புத்தூஹ் அல் காய்ப்'
எனப்படும். நாற்பது பகுதிகளாக விளங்கும் நூல்.
அவர் தோற்றுவித்த ஸ¥·பி பாதை 'காதிரியா' எனப்படும்.
ஸ¥·பி மார்க்கத்தின் முதல் தரீக்கத்-ஆக அமைந்திருப்பது காதிரியா.
இதைச் சேர்ந்த பீர்களும் பக்கிரிகளும் தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவ்ருடைய மகன்களில் பத்துப்பேர் இந்தியாவுக்கு வந்து மார்க்கத்தைப் பரப்பினர். அவர்களில் சிலர் தமிழகத்தில் இருந்தார்கள்.
இந்தியாவில் அவர்கள் காதிரியா இயக்கத்தை ஏற்படுத்திப் பரப்பினர்.
ஆயிரக்கணக்கானவர் அதனால் பயன்பெற்றனர். மதவேறுபாடு காட்டாமல்
இந்துக்கள் முஸ்லிம்கள் அனைவரிடமும் அன்பு காட்டி, அறவழியில்
சென்றனர்.
அவர் முதிய வயதுவரைக்கும் இருந்து பாக்தாத் நகரத்தில் சமாதி அடைந்தார்.
அவர்பேரில் அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்த தமிழர்கள்
அவரைப் பழனி மலையிலும் இருப்பதாக பாவித்து அங்கு இந்துக்கள்,
முஸ்லிம்கள் இரு சாராரும் கொண்டாடும் நிலையில் இருக்கிறார்.

முஹைய்தீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அவரை அழைப்பார்கள்.

அவர் பெயரால் முஹைய்தீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ், திருப்புகழ்
போன்ற பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆன்மீகத்திலும் கஷ்டத்திலும் தம்மை நினைத்தால் வெள்ளைக்
குதிரையில் ஏறி கடும்வேகத்தில் தாம் வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment